அலங்காநல்லுார் : மதுரை மாவட்டத்தில் இன்றைய நவீனயுகத்தில் இயந்திரங்களின் வருகையால் உழவு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
விவசாயிகள் வீடுகளில் உழவு மாடுகள் வளர்ப்பை கைவிட்டு வருகின்றனர். பாலமேடு பகுதியில் கன்றுகளுக்கு உழவு பயிற்சி தந்து விற்பனை செய்வதால்லாபம் கிடைப்பதாக நாராயணபுரம் விவசாயி முத்துராஜூ தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிறிய வயதில் இருந்து மாடுகளை வைத்து உழவு தொழில் செய்கிறேன். மணப்பாறை சந்தையில் வாங்கி வரும் வடகத்தி கன்றுகளை ஏரில் பூட்டி உழவுக்கு பயிற்சி கொடுப்பது எளிதல்ல. பல சிரமங்கள் உள்ளன. பழக்கப்படுத்திய பின் அந்த கன்றுகளை விற்பனை செய்வதில் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE