வாட்ஸ் ஆப் புகார்கள்

Added : நவ 28, 2019
Advertisement

* கூடுதல் கடைதிறக்க வேண்டும்
மதுரை ஜீவா நகர் மீனாம்பிகை நகர் பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடியில் ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. மக்கள் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் கார்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கடை திறக்க வேண்டும்.-மணிபாலா, ஜீவாநகர்.

* ரோட்டில்நடக்க முடியலமதுரை சூர்யா நகர் ராமன் நகர் கடைசி சந்தில் ரோடு மிக மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழை நேரத்தில் நடந்து செல்ல முடியவில்லை.- மனோன்மணி, சூர்யாநகர்.

* தேங்கும் மழை நீர்முடங்கும் மக்கள்மதுரை கோமதிபுரம் செவ்வந்தி தெரு மெயின் ரோட்டில் மழை நீர் பல நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன. வாகனங்கள் செல்ல முடியவில்லை. மக்களும் செல்ல முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராம்குமார், கோமதிபுரம்.

* கழிவு நீர் செல்லவழியில்லைமதுரை தாசில்தார் நகர் கல்லுாரி வீதி கழிவுநீர் தேங்குவதால் சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. கொசு தொல்லை அதிகரிக்கிறது. உடன் சரிசெய்ய வேண்டும் -சுவர்ணலதா அண்ணாநகர்.-------

* மாடுகள், நாய்களால் அச்சம்ஊமச்சிகுளம் வீரபாண்டி ரோட்டில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டுவதும், மாடுகள் முட்டி தள்ளி காயமடைய செய்வதும் அடிக்கடி நடக்கிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர்.- காமாட்சி, ஊமச்சிகுளம். ----

* சுகாதாரக்கேடாகமாறும் தெப்பக்குளம்மதுரை தல்லாகுளம் கோயில் தெப்பக்குளம் பகுதியில் சுகாதாரக் கேடு செய்யப்படுகிறது. ஓட்டல் கழிவுகள் குளத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. இதை கழிப்பறை மையமாக இங்குள்ளோர் பயன்படுத்தி வருகின்றனர்.-- திலகம், தல்லாகுளம்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X