நத்தம் : நத்தத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் வேளாண் கல்லுாரி மாணவர்கள் இப்பகுதியில் தங்கி பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியுடன் இணைந்து 'மரம் நட வேண்டும்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். தலைமையாசிரியர் மனோன்மணி துவக்கி வைத்தார். 'மரம் நடுவதன் அவசியம், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள்', குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.