மேலுார் : மதுரையில் ஆனந்தி செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.இதில் 7-15 வயதுக்குட்பட்ட பிரிவுகளின் கீழ் நடந்த போட்டிகளில் மேலுார் அ.செட்டியார்பட்டி பள்ளி மாணவி சோலையம்மாள், அ.வல்லாளபட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், வெற்றி செல்வி ஆகியோர் முதலிடம், காயத்ரி இரண்டாம் இடம் வென்றனர். மாணவர்களை அ.வல்லாளபட்டி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், பயிற்சியாளர் செந்தில்குமார், அ.செட்டியார்பட்டி தலைமையாசிரியை மணிமேகலை ஆகியோர் பாராட்டினர்.