பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையை உயர்த்த விவசாயிகள் முயற்சி

Added : நவ 28, 2019
Advertisement

சோழவந்தான் : சோழவந்தான் வைகை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உயரத்தை தற்காலிகமாக உயர்த்தும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

தடுப்பணையை விட தேனுார் கால்வாய் மேடானதால் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை. வைகையில்இருந்து நேரடி பாசன வசதி பெறும் முதல் ஆயக்கட்டுபகுதி களான தேனுார், சமயநல்லுார், பரவை ஆகியவை கண்மாய் பாசனத்தை நம்பியுள்ளன. தண்ணீர் இல்லாததால் விவசாயம் நடக்க வில்லை. கடந்தாண்டு தடுப்பணையில் 3 அடிக்கு மணல் மூடைகளை வைத்து விவசாயிகள் கால்வாயில் நீரை கொண்டு சென்றுதேனுார் கண்மாயை மட்டும் நிரப்பினர். மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. பரவை சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் கூறியதாவது: பொதுப்பணித்துறை அனுமதியுடன் தடுப்பணையில் இரும்பு தடுப்புகள் வைத்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லவுள்ளோம். முதற்கட்டமாக மணல் அள்ளும் இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X