மாநகராட்சி பள்ளிமாணவிகள் சாதனை
மதுரை பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் எச்.சி.எல்., விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று டில்லியில் நடந்த தேசிய போட்டிகளில் பங்கேற்றனர். வாலிபால் போட்டியில் காயத்ரி, ஷர்மிளா பாண்டி, கேரம் போட்டியில் யோகலட்சுமி முதலிடம் வென்றனர். லக்னோவில் நடக்கும் தேசிய தடகளம் மற்றும் கபடி போட்டியிலும் இப்பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றனர்.மேலும் குழந்தைகள் பார்லிமெண்ட் தேசிய போட்டியிலும் இப்பள்ளி மாணவிகள் ஆர்த்தி, அட்சயா, சீத்தாலட்சுமி, பிரியதர்ஷினி, வசந்த காவியா, மகாலட்சுமி, சினேகா, இலக்கியா, அங்காள ஈஸ்வரி, பாண்டிசெல்வி, நித்தியாஸ்ரீ, கீர்த்திகா, கமலி, விஷ்ணுபிரியா, காயத்திரி, அனீஷ் பாத்திமா, வசுமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவிகளை தலைமை ஆசிரியை மீனாட்சி பாராட்டினார். ஆசிரியர்கள் விஜயலட்சுமி, வித்யா, சந்திரகலா, மணிகண்டன் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு தின விழா
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் ரோட்ராக்ட் கிளப் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் அரசியலைமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெயராணி தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் ஜெயசிங், கங்கராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிளப் தலைவர் அல்மீன், செயலாளர் சையத் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.