தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்: உள்ளாட்சி தேர்தல் வருவதால்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019
Advertisement
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்:  உள்ளாட்சி தேர்தல் வருவதால்

மதுரை : உள்ளாட்சி தேர்தலுக்காக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிவோர் பட்டியலை மாநகராட்சி சேகரித்தது. இதன் அடிப்படையில் உதவி கமிஷனர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பொறியாளர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றப்பட்டுள்ளனர். 2வது மண்டல உதவி கமிஷனர் பழனிச்சாமி 4வது மண்டலத்திற்கும், இவரிடத்தில் அங்கிருந்த பிரேம்குமாரும், 1வது மண்டல உதவி கமிஷனர் முருகேச பாண்டியன் 4வது மண்டல நிர்வாக பொறியாளராகவும், இவரிடத்தில் அங்கிருந்த சேகரும் மாற்றப்பட்டனர்.

3வது மண்டல நிர்வாக பொறியாளர் சந்திரசேகர் 2வது மண்டலத்திற்கும், 2வது மண்டல நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் 3வது மண்டலத்திற்கும் மாற்றப்பட்டனர். தவிர ஒருங்கிணைந்த நிர்வாகப்பிரிவு கண்காணிப்பாளர் கிரிஜாபாய் 2வது மண்டலத்திற்கும், அங்கிருந்து கண்காணிப்பாளர் பாலாஜி ஒருங்கிணைந்த நிர்வாகப்பிரிவிற்கும், உதவி கமிஷனர் (வருவாய்) ரங்கராஜன், மண்டல நிர்வாக அலுவலராகவும் மாற்றப்பட்டனர்.

ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டது மாநகராட்சி அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நகர் நல அலுவலர் நியமனம்:

மாநகராட்சியில் நகர்நல அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. உதவி அலுவலராக வினோத்குமார் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். நகர்நல அலுவலர் பணியை கூடுதலாக கவனித்தார். இந்நிலையில் நகர்நல அலுவலராக மதுரை சுகாதார மற்றும் குடும்பநல பயிற்சி மைய முதல்வர் செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X