பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : நவ 28, 2019
Advertisement

மழைக்காலங்களில் சாலையால் அவதி: சங்ககிரி, சந்தைப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் எதிரே, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை, மண்சாலையாக உள்ளது. அதில், மழைக்காலங்களில், தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அதனால், ஊராட்சி அதிகாரிகள், சாலை வசதி ஏற்படுத்தித்தர, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

- டி.பாபு, சங்ககிரி.

ரத்தம் சொட்டி உலாவும் நாய்களால் அச்சம்: பனமரத்துப்பட்டி, காந்திநகர், சந்தைபேட்டை உள்ளிட்ட இடங்களில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, உடலில் காயங்களுடன், ரத்தம் சொட்டியபடி, நாய்கள் சுற்றித்திரிகின்றன. நோய் தாக்கிய, அந்த நாய்களால், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு தொற்றுநோய் பரவும் அபாயமுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த, பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

- ஏ.ஆர்.எஸ்.கோபிகண்ணன், பனமரத்துப்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X