மேட்டூர்: மேட்டூர் அணையில், மீன்வளத்துறை உரிமம் பெற்று, 2,000 பேர் மீன்பிடிக்கின்றனர். சுழற்சி முறையில், அவர்களில் ஒரு பகுதியினருக்கு, மீன்வளத்துறை சார்பில், மானிய விலையில் பரிசல், வலை வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டு, 150 மீனவருக்கு, 40 சதவீத மானியத்தில், பரிசல், வலை வழங்க, மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, மேட்டூர் மீன்வளத்துறை அலுவலகத்தில், அணை சுற்றுப்பகுதி மீனவர்களிடமிருந்து, அலுவலர்கள், நேற்று, விண்ணப்பங்களை பெற்றனர்.
Advertisement