பொது செய்தி

தமிழ்நாடு

'அனுமதியற்ற டாக்டர் கேன்டீன் சட்டப்படி விரைவில் அகற்றப்படும்'

Added : நவ 28, 2019
Advertisement

சேலம்: ''அரசு மருத்துவமனையில், அனுமதியின்றி இயங்கும், டாக்டர் கேன்டீன், சட்டப்படி விரைவில் அகற்றப்படும்,'' என, டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.
சேலம், அரசு மருத்துவமனையில், டீன் பாலாஜிநாதன் தலைமையில் கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், நேற்று மதியம், 12:15 மணிக்கு, டீன் அலுவலகம் அருகேவுள்ள டாக்டர் கேன்டீனுக்கு, ரோந்து சென்றனர். அப்போது, அதன் நிர்வாகி ராஜாவிடம், கேன்டீன் நடத்த அனுமதி வழங்கியது யார், எப்படி கேன்டீன் நடத்துகிறீர்கள் என, பாலாஜிநாதன், கேள்வி எழுப்பினார். முறையான பதில் இல்லாததால், உடனடியாக கேன்டீனை மூட, நடவடிக்கை எடுக்கும்படி, கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: இங்கு, 3,000 சதுரடி இடத்தை ஆக்கிரமித்து, கேன்டீன் எதிரே, வாகன நிறுத்த இடத்தின் ஒரு பகுதியை, உள் வாடகைக்கு விட்டு, முறைகேடு நடப்பது தெரியவந்துள்ளது. பேராசிரியர், இணை பேராசிரியர்கள் ஓய்வெடுக்க, 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அறை, தற்போது, டாக்டர் கேன்டீனாக செயல்படுகிறது. அதன் முதல் தளத்தில், பட்ட மேற்படிப்பு மாணவியர் விடுதி உள்ளது. கேன்டீனுக்கு, மக்களும் அனுமதிக்கப்படுவதால், மாணவியர் விடுதி பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பாலாஜிநாதன் கூறுகையில், 'அனுமதியின்றி, முறைகேடாக செயல்படும் டாக்டர் கேன்டீன், சட்ட ரீதியாக, ஒருவாரத்தில் அகற்றப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X