பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தொடக்கப்பள்ளிக்கு 'மொபைல் செயலி' தொடக்கம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளிக்கு, மொபைல் போன் செயலி துவக்கப்பட்டுள்ளது.பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு, மாணவ, மாணவியரின் கையெழுத்து திறனை மேம் படுத்த, சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும், மிக அழகாக மாணவர்கள் எழுதிய கடிதம், பெற்றோர், ஆசிரியர் புகைப்படம்

பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளிக்கு, மொபைல் போன் செயலி துவக்கப்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு, மாணவ, மாணவியரின் கையெழுத்து திறனை மேம் படுத்த, சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும், மிக அழகாக மாணவர்கள் எழுதிய கடிதம், பெற்றோர், ஆசிரியர் புகைப்படம் ஆகியவற்றுடன் கையெழுத்து பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், கையெழுத்து பெட்டகம் வழங்கல், குழந்தைகள் தின விழா, புரவலர் திட்டம் தொடக்கம், தகவல் தொழில்நுட்பம் தொடக்கம், பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழா, நேற்று நடந்தது. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன் வரவேற்றார். குள்ளப்பநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன், வட்டார வள மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாணவ, மாணவியருக்கு கையெழுத்து பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி பெயரில், மொபைல் போன் செயலி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளி நிர்வாகம், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க, மொபைல் போன் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளியில் நடக்கும் நிகழ்வை, பெற்றோர்கள், கல்வியாளர் தெரிந்துகொள்ளலாம். மாணவரின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம் உள்ளிட்ட விபரங்களை, பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடி பார்க்கலாம். கல்வி தொடர்பான வீடியோ, பள்ளியிலுள்ள வசதி, கற்பிக்கும் முறை குறித்தும் அறியலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X