சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அளவு மீறி மது அருந்திய எலக்ட்ரீஷியன்; நண்பர்கள் விட்டுச்சென்றதால் விபரீதம்

Added : நவ 28, 2019
Advertisement

ஏற்காடு: அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், எலக்ட்ரீஷியனை, நண்பர்கள் விட்டுச்சென்ற நிலையில், அவர், குட்டையில் இறந்து கிடந்தார். ஏற்காடு, ஏ.என்.மங்களம் பகுதியைச் சேர்ந்த, மாரிமுத்து மகன் சிலம்பரசன், 28; எலக்ட்ரீஷியன். இவரது நண்பர்கள், கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், 29, துரைசாமி, 28. மூவரும், நேற்று முன்தினம், ஏற்காடு, பகோடா பாயின்ட் அருகே, மது அருந்தினர். பின், வாழவந்தி வழியாக, சேலம் புறப்பட்டனர். ஆத்துப்பாலம், வாணியாறு பகுதியில், சாலையோரம், தங்கள் இருசக்கர வாகனங்கள் இரண்டையும் நிறுத்திவிட்டு, அரை கி.மீ., தூரமுள்ள, தேக்கு மர தோப்புக்குள் சென்று, மது அருந்தினர். போதை அதிகமாகி எழ முடியாததால், சிலம்பரசனை அங்கேயே விட்டு, இருவரும் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை, சிலம்பரசன் வீட்டுக்கு வராததால், அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டனர். சிக்னல் கிடைக்காததால், இருவரும், மீண்டும் ஏற்காடு வந்தனர். அங்கு, சாலையோரம் சிலம்பரசனின் பைக் இருந்தது. தேக்கு மர தோப்புக்குள் சென்று பார்த்தபோது, அவரது செருப்பு, மொபைல் போன் கிடந்தது. அவரை தேடியபோது, அங்குள்ள குட்டையில், உடல் மிதந்தது. பின், அவர்கள் தகவல்படி, ஏற்காடு போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். சிலம்பரசனுக்கு, மனைவி, 7 வயதில் மகன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X