சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணப்பையை லவட்டிய மகன், தாய்க்கு தர்மஅடி

Added : நவ 28, 2019
Advertisement

சேலம்: அரிசி வியாபாரியின் பணப்பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன், தன் தாயிடம் ஒப்படைத்தான். இதனால், இருவரையும் வியாபாரிகள் சுற்றிவளைத்து, நன்கு கவனித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, சீனிவாசா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70; அதே பகுதி யில் அரிசி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, ?ஹாண்டா ஆக்டிவா மொபட்டில் வந்த அவர், கடை முன் வண்டியை நிறுத்திவிட்டு, கடையை திறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த சிறுவன், மொபட்டிலிருந்த பையை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆறுமுகம் கூச்சலிட, அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், சிறுவனை துரத்திக்கொண்டு சென்றனர். அப்போது, சந்தைப்பேட்டையில் நின்றிருந்த, தாயிடம், சிறுவன் பையை வழங்கினான். உடனே, தாய், மகனை சுற்றி வளைத்த வியாபாரிகள், இருவருக்கும் தர்ம அடி கொடுத்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், மதுரை, வண்டியூரைச் சேர்ந்த ராஜா மனைவி ராஜம்மாள், 45, அவரது, 12 வயது மகன் என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பையை மீட்டு, அதிலிருந்த, 1,500 ரூபாயை, ஆறுமுகத்திடன் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X