மணல் கடத்தியவர் தப்பி ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் தப்பி ஓட்டம்

Added : நவ 28, 2019

தலைவாசல்: தலைவாசல் அருகே, கிழக்குராஜாபாளையம், சுவேத நதியிலிருந்து மணல் கடத்துவதாக, வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு, லத்துவாடி வி.ஏ.ஓ., தாஜூதீன் தலைமையில் அதிகாரிகள், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரை ஓட்டி வந்தவர், அதிகாரிகளை பார்த்தவுடன், வண்டியை நிறுத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் சோதித்தபோது, மணல் கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் புகார்படி, வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X