மாற்றுத்திறனாளிகளுக்காக பஸ் நிற்கலாமே: ஈரோடு மாநகரில், சில அரசு மற்றும் தனியார் டவுன் பஸ் ஓட்டுனர்கள், காலதாமதத்தை காரணம் காட்டி, பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை பஸ்களில் ஏற்றி செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், பல மணி நேரம் பஸ் நிறுத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. பஸ் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
- என்.ஈஸ்வரன், ஈரோடு.
4 வழிகளில் பஸ்கள் வர அனுமதி கூடாது: ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, அகில்மேடு வீதி வழியாக வந்து பூக்கடைகள் உள்ள பகுதி, நாச்சியப்பா வீதி என, நான்கு வழிகளில் பஸ்கள் நுழைகின்றன. இதனால், பயணிகளும், பஸ் டிரைவர்களும் அடிக்கடி மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்த்து, நாச்சியப்பா வீதி மற்றும் ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து சத்தி சாலை வழியாக நூற்றாண்டு நுழைவு வாயில் வழியாக பஸ்கள் எதிர் திசையில் நுழைவதை தடை செய்ய வேண்டும்.
- ஏ.தமிழ்செல்வன், ஈரோடு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE