ஈரோடு: ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தில், (ஈடிசியா), தொழில் முனைவோர்களுக்கு கணக்கியல் ஒரு நாள் அடிப்படை பயிற்சி, ஜி.எஸ்.டி., - டேலி பயிற்சி நேற்று நடந்தது. முன்னாள் தலைவர் வெங்கடேஸ் முன்னிலை வகித்தார். ஆடிட்டர் கிருஷ்ணசாமி, வணிகத்தில் கணக்கு பராமரித்தல் குறித்து விளக்கினார். பின், கணக்கில் நடைமுறைகள், ஜி.எஸ்.டி., - டேலி மென்பொருள் குறித்து தங்கராஜ் பேசினார். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடுகளை செய்தது. ஒருங்கிணைப்பாளர் ராசுமணி நன்றி கூறினார்.