பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம்: உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : நவ 28, 2019
Advertisement

ஈரோடு: உயர்மின் கோபுரம் அமைக்கும் இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு, தென்னை மரங்களுக்கான இழப்பீடு தொகை வழங்குவதில், தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக, உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது: திண்டுக்கல் முதல், கோவை வரை அமைக்கப்பட்டு வரும், நான்கு வழிச்சாலை திட்டத்தில் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு, தென்னை மரம் ஒன்றுக்கு, 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தென்னை மரம் ஒன்றுக்கு, 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் அறிவித்தார். ஆனால், தற்போது உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு, 36 ஆயிரத்து, 400 ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்க அரசு அறிவித்துள்ளது, ஏமாற்றம் தருகிறது. சாலை விரிவாக்க திட்டங்களால், நெடுஞ்சாலை அமைக்கப்படுவதால், இருபுறமும் உள்ள நிலங்களின் மதிப்பு உயர்கிறது. உயர் மின் கோபுரம் அமைப்பதால், இருபுறமும் உள்ள ஒட்டு மொத்த நிலங்களின் மதிப்பும் முழுமையாக சரிவடைந்துவிடும். ஆனால், நெடுஞ்சாலை திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் தென்னை மரத்துக்கு, இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாகுபாடு காட்டுவதாக தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களில், 99 சதவீதம், விவசாயிகளின் ஒப்புதல் இன்றி, போலீஸ், வருவாய் துறையினரால் மிரட்டப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X