பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதியை கடைப்பிடிக்க வலியுறுத்திய பெண் போலீஸ் மாற்றம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஈரோடு: கிரைம் போலீசிடம், போக்குவரத்து விதிமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்திய, பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஈரோடு ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீஸ் கலை, 26. இவர், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போக்குவரத்து சீரமைப்பு பணியை சில நாட்களாக மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பணியில் இருந்தார். அப்போது,

ஈரோடு: கிரைம் போலீசிடம், போக்குவரத்து விதிமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்திய, பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோடு ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீஸ் கலை, 26. இவர், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போக்குவரத்து சீரமைப்பு பணியை சில நாட்களாக மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பணியில் இருந்தார். அப்போது, ஒரே பைக்கில் மூவர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் போடாதது ஏன். ஒரே பைக்கில் மூவர் செல்லலாமா என, கேட்டுள்ளார். பைக் ஓட்டிய நபர், பைக்கை நிறுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியபின், அங்கிருந்து மீண்டும் மூவருடன் பைக்கில் சென்றார். பைக் எண்ணை குறித்து வைத்து கொண்ட பெண் போலீஸ் கலை, ஈரோடு எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், பைக்கில் சென்றது ஈரோடு டவுன் கிரைம் போலீஸ் தவசி, 40, என தெரியவந்தது. இது குறித்து, ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ராஜூ நேற்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், போக்குவரத்து போலீசிலிருந்து, பெண் போலீஸ் கலையை மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இது, போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X