பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : நவ 28, 2019
Advertisement

லிப்ட் பழுது; முதியவர்கள் அவதி: ஈரோடு, காந்திஜிசாலையில் உள்ள முன்னாள் படைவீரர் மாளிகையில் உள்ள, லிப்ட் பழுதாகி விட்டது. இதனால், இக்கட்டடத்தில் இயங்கி வரும் மருத்துவமனை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு வரும் முதியவர்கள், படியேறி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, லிப்டை விரைவில் சரிபடுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
குண்டும் குழியுமான சாலையால் அவதி: மொடக்குறிச்சி யூனியன், வடுகபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஞானபுரத்திலிருந்து, எலவநத்தம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தவிர, சாலையோரத்தில் செடி, கொடிகள், முட்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன.குண்டும், குழியுமாக உள்ள சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அபாய பாலம்; தடுப்புச் சுவர் தேவை: ஈரோடு, அக்ரஹாரம் பகுதியில் செல்லும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில், மழைக்காலம் மட்டுமின்றி, எப்போதும் கழிவு நீர் ஓடும். தவிர, சாய, சலவை ஆலை கழிவுகளும் இதில் செல்லும். இந்த ஓடையை சுற்றி இருபுறமும் குடியிருப்புகள் உள்ளதால், எந்நேரமும் சென்று வருவர். ஓடையை கடக்கும் பாலத்தில் தடுப்புச் சுவர், மின் விளக்கு வசதி இல்லாததால், அடிக்கடி விபத்தும், ஓடைக்குள் விழுந்துவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.

பயன்பாடற்ற அரசு கட்டடம்: ஈரோடு வெண்டிபாளையத்தில், பொது பணித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு விவசாயிகள் குறை தீர் கூட்டம், விவசாயிகள், பொதுமக்கள், ஒப்பந்ததாரர்களுடனான கலந்தாய்வு கூட்டம், பொது பணி துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த, ஓராண்டுக்கு முன் மீட்டிங் ஹால் கட்டப்பட்டது. இன்று வரை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இக்கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X