பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அலுவலர்கள் ஆன்லைன் மூலம் ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு

Added : நவ 28, 2019
Advertisement

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஆன்லைன் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் பணியில், மாவட்டம் முழுவதும், 20 ஆயிரம் ஊழியர்கள் ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களே, ஊழியர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தனர். இதில், முறைகேடு, பாரபட்சம் காட்டப்பட்டதாக, புகார்கள் வந்தன. இந்நிலையில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், இதுபோன்ற புகார்களை தவிர்க்கும் வகையில் இணைய தளம் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தலில் ஈடுபட உள்ள ஊழியர்கள், அலுவலர்கள் பெயர், சம்பள விகிதம், வசிப்பிடம், துறை, போன் எண், உள்ளிட்ட விபரங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அவரவர் பதவிக்கு ஏற்ப, இணைய தளம் மூலம் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X