பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது எக்ஸலேட்டர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

Added : நவ 28, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், இரண்டாவது எக்ஸலேட்டர் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தென்னக ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றான, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக கடந்த, 2014ல், நான்கு நடைமேடைகளை இணைத்து இரண்டு லிப்ட், இரண்டு எக்ஸலேட்டர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மூன்று கோடி ரூபாய் மதிப்பில் இப்பணியை, 2015க்குள் முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி முழுமை பெறவில்லை. மூன்று மற்றும் நான்கு நடைமேடைகளை இணைக்கும், எக்ஸலேட்டர் மற்றும் லிப்ட் பணிகள் நிறைவு பெற்று இயங்கப்பட்டு வருகிறது. ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடைகளை இணைக்கும் எக்ஸலேட்டர் பணிகள் முடிந்த பாடில்லை. மந்தமாக நடந்து வருகிறது. பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாட்ஷா கூறியதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 150 ரயில்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடை இணைக்கும் எக்ஸலேட்டர் பணியை, 2015ம் ஆண்டிலேயே முடித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை நிறைவு பெறவில்லை. இது குறித்து பலமுறை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இம் மாதம், 5ல் மனு கொடுப்பட்டது. பயணிகள் நலன் கருதி பணியை விரைந்து முடித்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X