பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் அறுவடை பரிசோதனைக்கான பணியாளர்கள் தேர்வு

Added : நவ 28, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணியாளர் தேர்வு முகமை (ஏஜென்சி) மூலம் நிரப்ப உள்ளனர். இது குறித்து, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதனை திடல்களின் தேர்வுப்பணி, அறுவடைப்பணி, அதை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தோட்டக்கலை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புடன் கணினி இயக்க திறன் பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆர்வம் உள்ள அலுவலர்களும், இப்பணியை மேற்கொள்ள தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவர். பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம், தொகுப்பூதியமாக, 11 ஆயிரம் ரூபாய் மற்றும் இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சேவை கட்டணம், ஜி.எஸ்.டி., போன்றவை பணியாளர் தேர்வு முகமை மூலம் வழங்கப்படும். எனவே, பணியை மேற்கொள்ள பதிவுத்துறைகளின் மூலம், பதிவு செய்து செயல்பட்டு வரும் தகுதி வாய்ந்த பணியாளர் தேர்வு முகமை, வரும் டிச., 5க்குள் ஒப்பந்த புள்ளியுடன் விண்ணப்பிக்கலாம். இம்முகமை, பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்த பட்சம், மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை, 'தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம், வித்யா நகர், திண்டல் மேடு, ஈரோடு - 638012, போன்: 0424 2339497' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X