பொது செய்தி

தமிழ்நாடு

வாகன புகை அளவை கட்டுப்படுத்த ஆய்வு: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தகவல்

Added : நவ 28, 2019
Share
Advertisement
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பவானி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, அந்தியூர் ஒன்றிய பகுதிகளில், முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், 1,356 பயனாளிகளுக்கு, 1.80 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, புலிகள் சரணாலயத்தை ஒட்டி, 500

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பவானி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, அந்தியூர் ஒன்றிய பகுதிகளில், முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், 1,356 பயனாளிகளுக்கு, 1.80 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, புலிகள் சரணாலயத்தை ஒட்டி, 500 மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தியூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மணியாச்சி பள்ளம் மற்றும் தோணி மடவு திட்டத்தில் ஏதாவது ஒன்றை விரைவில் முதல்வர் அறிவிப்பார். ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X