பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு! சாலை விவகாரத்தில் மக்கள் மனு

Added : நவ 28, 2019
Advertisement

மொடக்குறிச்சி: 'அவல்பூந்துறை சாலை விரிவாக்கப்பணி விவகாரத்தில், விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே பொறுப்பேற்கவேண்டும்' என, ஈரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சாரதியிடம், அவல்பூந்துறையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புகார் மனு அளித்தனர்.
அதன் விபரம்: அவல்பூந்துறை நால்ரோட்டில் சாலை விரிவாக்கப்பணிக்காக, ஈரோடு- காங்கேயம் சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 20 அடி அகலம், ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் பறித்து, மண் எடுத்து சென்றனர். இன்று வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. சாக்கடை கால்வாயும், தார்ச்சாலையும் அமைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பணிகள் நடக்கும் பகுதியில் விபத்து மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டால் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தான் பொறுப்பாவர். பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் மனு அளித்தும் முறையான பதில் இல்லை. பொதுமக்களின் சிரமத்தை கருதி உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பணி தொடங்கப்படும் வரை சாலையை மூடி மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் அல்லது பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X