பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை வழிச்சாலை திட்டம்: தலைமை பொறியாளர் துவக்கி வைப்பு

Added : நவ 28, 2019
Advertisement

பு.புளியம்பட்டி: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் பசுமை திட்டத்தின் கீழ் பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்கு, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. இதற்கென ஆறடி உயரத்தில் வளர்க்கப்பட்டுள்ள மருதம், வேம்பு, நாவல், வேங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்கான பணி நடக்கிறது. அதன்படி, நேற்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப்பொறியாளர் சாந்தி, புன்செய்புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் தாசம்பாளையம் என்ற இடத்தில் நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்று நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பவானிசாகர் அணையின் முன், பவானி ஆற்றில் உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக, 7.98 கோடி ரூபாய் செலவில் புதிதாக உயர்மட்டப் பாலம் அமையும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கோட்டப்பொறியாளர் சோமசுந்தரமுருகன், உதவி கோட்டப்பொறியாளர் குருமூர்த்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X