பொது செய்தி

தமிழ்நாடு

பட்டய தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க யோசனை

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஈரோடு: பட்டயத்தேர்வு விடைத்தாள் ஒளிநகல்கள் மற்றும் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால், கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வின் விடைத்தாளின் ஒளி நகல் கோரி, அக்., 30 முதல் நவ., 6 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் ஒளிநகல்கள், நேற்று முதல் வரும், 30

ஈரோடு: பட்டயத்தேர்வு விடைத்தாள் ஒளிநகல்கள் மற்றும் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால், கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வின் விடைத்தாளின் ஒளி நகல் கோரி, அக்., 30 முதல் நவ., 6 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் ஒளிநகல்கள், நேற்று முதல் வரும், 30 வரை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, மறுகூட்டல் தேவைப்படும் பட்சத்தில் உரிய கட்டணம் செலுத்தி, இன்று முதல் வரும், 3 வரை, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, இணையம் வழியாக பதிவேற்றம் செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வோர், ஒரு பாடத்துக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும். மறு மதிப்பீட்டுக்கு, 505 ரூபாய் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X