பொது செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பு வரும் வரை பாவடி நிலத்தை பயன்படுத்த கூடாது; கலெக்டரிடம் மனு

Added : நவ 28, 2019
Advertisement

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை நால்ரோடு அருகே, பயணிகள் நிழற்கூடத்துடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்க, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி, எவ்வித பயன்பாட்டுக்கும் கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என, செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்தனர்.
செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் சாமி, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவல்பூந்துறை நால்ரோட்டில், செங்குந்தர் மகாஜன சங்கத்திற்கு சொந்தமான பாவடி நிலம் உள்ளது. இந்ந நிலத்தை, நெசவாளர்கள் பாவு நெய்வதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக, ஈரோடு உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தீர்ப்பாணை வரும் வரை, பாவடி நிலத்தை எவ்வித பயன்பாட்டிற்கும், கட்டடம் கட்டவும் யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X