சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்பை தேடி மீண்டும் வரும் யானைகளால் ஊழியர்கள் பீதி

Added : நவ 28, 2019
Share
Advertisement
சத்தியமங்கலம்: சோதனை சாவடி ஓரங்களில், கரும்பை கொட்டுவதால், இரவு நேரங்களில் கரும்பை தேடி மீண்டும் யானைகள் வர தொடங்கியுள்ளதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே, உள்ள தனியார் கரும்பு சர்க்கரை ஆலைக்கு தாளவாடி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியை கடந்து செல்கிறது. சோதனை சாவாடியில்

சத்தியமங்கலம்: சோதனை சாவடி ஓரங்களில், கரும்பை கொட்டுவதால், இரவு நேரங்களில் கரும்பை தேடி மீண்டும் யானைகள் வர தொடங்கியுள்ளதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே, உள்ள தனியார் கரும்பு சர்க்கரை ஆலைக்கு தாளவாடி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியை கடந்து செல்கிறது. சோதனை சாவாடியில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி செல்வதற்கு ஏதுவாக, உயரத்தை குறைக்க கரும்பை அகற்றி, அதை சாலையோரத்தில் போட்டு செல்கின்றனர். கரும்பு வாசனையை கண்டு கொள்ளும் யானைகள், கரும்பை சாப்பிட வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வருகிறது. தொடர் நடவடிக்கையால், கரும்பு கொட்டுதை நிறுத்திய நிலையிலும், கடந்த சில நாட்களாக பண்ணாரி சோதனை சாவடிகளில் இரவு நேரங்களில் கரும்பை தேடி, மீண்டும் யானைகள் வரத்தொடங்கியுள்ளதால் ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X