சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், 2 டிராக்டர் பறிமுதல்

Added : நவ 28, 2019
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள, அண்ணமார்பாளையம் அருகே உள்ள பகுதியில், அரசு புறம்போக்கு இடத்தில், செம்மண் எடுத்து வருவதாக நேற்று மதியம் அந்தியூர் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர், அங்கே ஒரு பொக்லைன் இயந்திர உதவியுடன், இரண்டு டிராக்டர்களில் மண் எடுத்தது தெரியவந்தது. பின்னர், மூன்று வாகனங்களையும் பறிமுதல்

அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள, அண்ணமார்பாளையம் அருகே உள்ள பகுதியில், அரசு புறம்போக்கு இடத்தில், செம்மண் எடுத்து வருவதாக நேற்று மதியம் அந்தியூர் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர், அங்கே ஒரு பொக்லைன் இயந்திர உதவியுடன், இரண்டு டிராக்டர்களில் மண் எடுத்தது தெரியவந்தது. பின்னர், மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அந்தியூர் தாலுகா அலுவலகம் கொண்டு வந்து நிறுத்தினர். அந்தியூர் காலனியை சேர்ந்த, வாகன உரிமையாளர் பொன்ராஜிடம், 55, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X