சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.36 லட்சம் ஏமாற்றி கொலை மிரட்டல்: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஈரோட்டில் கைது

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஈரோடு: போலீசாரிடம் பிடிபட்ட தொகையை மீட்டு தருவதாக கூறி, 36 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.சென்னை, விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த முகமது ரியாஜூதீன், 38, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகார் மனு: என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சந்தோஷ்பால்

ஈரோடு: போலீசாரிடம் பிடிபட்ட தொகையை மீட்டு தருவதாக கூறி, 36 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த முகமது ரியாஜூதீன், 38, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகார் மனு: என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சந்தோஷ்பால் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வெங்கடேஷ், 50, அறிமுகமானார். அவர், தன்னை, 'ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறவினர்' என, கூறினார். 2019 ஆக.,19ல் கத்தாரிலிருந்து, மொபைல் போன் மூலம் சந்தோஷ்பால் என்னை தொடர்பு கொண்டு, தன் உறவினர் மாத்யூ என்பவருக்கு, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இடம் உள்ளது. அதை விற்பதாக கூறி, என்னிடம் முன் பணமாக, ஒன்றரை கோடி ரூபாய் பெற்று கொண்டார். அந்த பணத்தை அவரது நண்பர்கள் மூலம், ஒரு காரில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரர் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். மறுநாள், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வாகனத் தணிக்கையின் போது பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து விட்டு, பணத்தை பெற்று செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இது குறித்து, மொபைல் போன் மூலம் வெங்கடேஷூக்கு தகவல் தெரிவித்தேன். அவர், 'சலீம் அகமது என்ற நபரை தெரியும். அவரது சகோதரர் ஐ.ஆர்.எஸ்., துறையில் பணியாற்றுகிறார்' எனக் கூறி இணைப்பை துண்டித்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் மொபைல் போனில் பேசினார். சலீமிடம் தான் பேசியதாகவும், மாவட்ட அதிகாரிகளுக்கு பணம் தர வேண்டும். குறைந்தது, 35 லட்சம் ரூபாய் செலவாகும். தங்களுக்கு தனியாக, ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறினார். சென்னை பாரீசில் உள்ள தனியார் வங்கி மூலம், 36 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால், பறிமுதலான பணத்தை இதுவரை மீட்டு தரவில்லை. இதுகுறித்து கடந்த, 6ல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வெங்கடேஷிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார். ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர், தாழம்பூரை சேர்ந்த வெங்கடேஷ், 50, என்பவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த சலீமை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X