பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளாக கொத்தடிமைகள் செங்கல்சூளையில் 9 பேர் மீட்பு

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே, செங்கல்சூளையில், 10 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த, ஒன்பது பேர் மீட்கப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேட்டில், படவேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 45. செங்கல்சூளை நடத்தி வருகிறார். இதில், கடந்த, 10 ஆண்டுகளாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கன்னலத்தை சேர்ந்த காசி, 57, ஆனந்தன், 25, ஆகியோரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பரிமளா, 22, சிவா, 37, ரமேஷ், 37,

ஆரணி: ஆரணி அருகே, செங்கல்சூளையில், 10 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த, ஒன்பது பேர் மீட்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேட்டில், படவேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 45. செங்கல்சூளை நடத்தி வருகிறார். இதில், கடந்த, 10 ஆண்டுகளாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கன்னலத்தை சேர்ந்த காசி, 57, ஆனந்தன், 25, ஆகியோரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பரிமளா, 22, சிவா, 37, ரமேஷ், 37, ரேவதி, 30, ராஜேஸ்வரி, 20, ஆகியோரும் கொத்தடிமையாக இருந்தனர். இவர்களுடன், இரண்டு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகள் உடனிருந்தனர். இது குறித்து, திருவண்ணாமலை கொத்தடிமை மீட்பு சங்கத்திற்கு, தகவல் கிடைத்தது. ஆரணி ஆர்.டி.ஓ., மைதிலி தலைமையில் சென்ற குழுவினர் அவர்களை மீட்டனர். ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அனைவரும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 28 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக அழைத்து வரப்பட்டதும், தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X