பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 பாடத்திட்டத்தை படித்தாலே 'நீட்' தேர்வில் வெற்றி: செங்கோட்டையன்

Added : நவ 28, 2019
Advertisement

திருவண்ணாமலை; ''பிளஸ் 2 பாடத்திட்டத்தை படித்தாலே, 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற அளவிற்கு பாடதிட்டம் கொண்டு வரப்பட உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதை பாராட்டி, ஆசிரியர்கள் மற்றும் மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நினைவு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், பிளஸ் 2, பாடத்திட்டத்தை படித்தாலே 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும் அளவிற்கு பாடத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. 28(இன்று) முதல், பள்ளி தொடங்கியவுடன், 15 நிமிடமும், மாலையில், 40 நிமிடமும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கல்வி அளிக்கப்பட உள்ளது, மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இசை, ஓவியம், உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 'டெட்' தேர்வில், 89 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று காத்திருப்பில் உள்ளனர். தற்போது, 16 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் பணி இல்லாத நிர்வாக பணிக்காக, காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X