தொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: இலக்கியம்பட்டி பஞ்., ஜே.ஜே., நகரில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, எட்டாண்டுகளுக்கு முன் பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், இதில் இதில், தண்ணீர் வருவதில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, இத்தொட்டியின் மின்மோட்டாரை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவை மையம் திறக்கப்படுமா? தர்மபுரி அடுத்த நாயக்கனஹள்ளியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சேவை மையம் கட்டப்பட்டது. இதில், பட்டா, சிட்டா வழங்குதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், ஆதார் கார்டில் திருத்தம், வருமான, ஜாதி, இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை மக்கள் எளிதில் பெற, இது கட்டப்பட்டது. திறக்கப்படாமல் உள்ளதால், இவ்வாறான சான்றிதழ்களை பெற, இப்பகுதி மக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. இதை திறக்க வேண்டும்.
பயனின்றி உள்ள அரசு கட்டடம்: பாலக்கோடு ஒன்றியம், சவுளூரில், கடந்த, 2011-2012ல், மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. இதுவரை திறக்காமல் காட்சி பொருளாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் தெருவோரம் மற்றும் மரங்களின் கீழ், சங்க வரவு, செலவுகளை பார்த்து வருகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில், இக்குழுவினர் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க, காட்சி பொருளாக உள்ள, மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.