பொது செய்தி

தமிழ்நாடு

வினாடி - வினா போட்டியில் பேகாரஹள்ளி பள்ளி முதலிடம்

Added : நவ 28, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் வினாடி -வினா போட்டிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட அளவிலான வினாடி -வினா போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளுக்கு உதவி திட்ட அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி போட்டியை துவக்கி வைத்தார். இதில், கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற, 12 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் லட்சுமி, பிரியா, கவுதம், ராஜா அணி, முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, இரண்டாம் இடத்தை பெற்றது. முதல் பரிசாக, 2,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X