பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு முகாமில் 137 பேருக்கு பணி ஆணை

Added : நவ 28, 2019
Advertisement

நல்லம்பள்ளி: ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள, ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் ஆண்டுதோறும் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி யூனியனில், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. பி.டி.ஓ. அருண்மொழித்தேவன் முகாமை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு தகவல்கள் குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் பேசினார். முகாமில், சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கம்ப்யூட்டர், வங்கி, இன்சூரன்ஸ், மனிதவள மேம்பாடு, தையல், பனியன், லேப்டாப், மொபைல்போன் சர்வீஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில், 219 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம், 435 பேர் பங்கேற்றனர். அவர்களில், 137 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மகளிர் திட்ட, உதவி திட்ட அலுவலர்கள் ராஜீவ்காந்தி, கணேசன், மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X