பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விபரம் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்'

Added : நவ 28, 2019
Advertisement

தர்மபுரி: ''ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விபரங்களை சேகரித்து, அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
தர்மபுரியில், உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு உட்பட்ட, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், வேட்புமனுக்கள் பெறுதல், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணியில், கவனமுடன் செயல்பட வேண்டும். ஓட்டுச்சாவடிகளில், அடிப்படை வசதிகளை, முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேவையான, ஓட்டுச்சாவடி அலுவலர்களின் விபரங்களை சேகரித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கணிணி முறையில், பணியிடம் ஒதுக்கீடு செய்வது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து, ஊரக மற்றும் நகர்புற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, முறையாக பயிற்சிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், காவல்துறை தலைவர் (தேர்தல் பிரிவு) சேஷசாயி, மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) சரவணன், மாநில தேர்தல் ஆணைய உதவி ஆணையர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X