பொது செய்தி

தமிழ்நாடு

புதிய நெல் ரகம் அறிமுகம்: விவசாயிகள் வேண்டுகோள்

Added : நவ 28, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நெல் சாகுபடி பிரிவு கூட்டம் நடந்தது. நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் அனுமந்தன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர் பேசியதாவது: பையூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், அறிமுகப்படுத்திய, 'பையூர் 1' என்கிற நெல் ரகம் வரவேற்பு பெற்றது. ஆனால், 25 ஆண்டுகளாக வேறு நெல் ரகம் கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இன்னும் கண்டுபிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், இரண்டு அணைகள், 15 தடுப்பணைகள் உள்ளன. இதில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல், நெல் இருபோக சாகுபடி நடக்கிறது. இந்நிலையில், பிரியாணி ரக நெல்லை ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்து பயிரிடுவதால், பலவிதமான புதிய நோய்கள் பயிர்களுக்கு வருகின்றன. இதை கட்டுப்படுத்த வேளாண் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பயிர்களுக்கு நோய் அதிகமாகி உள்ளன. பையூர், மண்டல ஆராய்ச்சி நிலையம், தனது நெல் ஆராய்ச்சியை நிறுத்தியிருப்பது, வடமேற்கு மண்டல விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மீண்டும், 110 நாட்கள் வயது கொண்ட புதிய சன்னநெல் ரகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X