பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

Added : நவ 28, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், பட்டமளிப்பு விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற் சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடந்தது. கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்ரமணி தலைமை வகித்தார். மருத்துவர் நாகேஷ், 2017-19ம் ஆண்டில் பயிற்சி பெற்ற, 20 எலக்ட்ரீஷியன் மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ்களை வழங்கினார். விழாவில், கூட்டுறவு நிலைய முதல்வர் பேசுகையில், ''தற்போது தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பிரபல தொழிற்சாலைகளில் தொழில் பழகுனர் சட்டத்தின் ஓராண்டு பயிற்சியை முடிக்க வேண்டும். பயிற்சி முடிவில், என்.ஏ.சி., சான்றிதழ் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X