பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி தொழில்நுட்பத்தை அறிய 50 விவசாயிகள் 'கண்டுணர்வு சுற்றுலா'

Added : நவ 28, 2019
Advertisement

ஓசூர்: ஓசூரில், மானாவாரி தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
ஓசூர், வட்டார வேளாண் துறை மூலம், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் (அட்மா), மானாவாரி தொழில் நுட்பத்தை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், சித்தனப்பள்ளி, நந்திமங்கலம் கிராம விவசாயிகள், 50 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் முன்னிலையில், அசோலா வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்க திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர். அப்போது, எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய முனைவர் சுந்தர்ராஜ், இயற்கை முறையில், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்க மளித்தார். கால்நடை தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ், அசோலா வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் கால்நடைகளுக்கு அசோலா கொடுப்பதால் உண்டாகும் பயன்கள், தீவனச்சோளம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம், தேனீ வளர்ப்பு மூலம் உண்டாகும் பயன்கள், முக்கியத்துவம் குறித்து, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளார் மீனா செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X