பொது செய்தி

தமிழ்நாடு

'மக்கள் தன்னை மறந்து விடுவர் என்ற எண்ணத்தில் ஏதேதோ பேசும் ஸ்டாலின்'

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஓசூர்: ''தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.இது குறித்து ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் மனதில், ஜெயலலிதாவுக்கு பின், முதல்வர் பழனிசாமி இடம் பிடித்து விட்டார். இனி தன்னை, தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்.

ஓசூர்: ''தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இது குறித்து ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் மனதில், ஜெயலலிதாவுக்கு பின், முதல்வர் பழனிசாமி இடம் பிடித்து விட்டார். இனி தன்னை, தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார். இதற்கு முன், பல்வேறு காலகட்டங்களில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்; இந்த ஆட்சி முடிந்து விடும் என சொன்னார்கள்; தவறான தகவலை மக்கள் மனதில் பதிய வைத்து, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் இருந்தனர். ஆனால் முதல்வர், துணை முதல்வர் தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. அதற்கு அங்கீகாரம் தரும் வகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில், பொதுமக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தனர். அதை தாங்கி கொள்ள முடியாத ஸ்டாலின், எதை வேண்டுமானாலும் சொல்லுவார்; அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களுக்கு நன்மை செய்யும் வகையில், எங்கள் ஆட்சி நடக்கிறது. தமிழக கூட்டுறவு தேர்தலில் எப்படி, அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றதோ, அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் முழு வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X