பொது செய்தி

தமிழ்நாடு

காற்று மாசு தவிர்க்க மரம் வளர்ப்பு: விதைப்பந்து தூவிய மாணவர்கள்

Added : நவ 28, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: 'காற்று மாசுவை தவிர்க்க, மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என, விதைப்பந்து திருவிழாவில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேசிய பசுமைப்படை, கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணகிரி மகாராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில், கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடையில் விதைப்பந்து திருவிழா நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் ராஜேஷ் தலைமை வகித்தார். வனச்சரக ஆய்வாளர் சக்திவேல், டாக்டர் அமானுல்லா நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில், வாகை, யானை குண்டுமணி, சீயக்காய், வேம்பு, புளியம், அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை மகாராஜகடை காப்புக்காட்டில் மாணவ, மாணவியர் தூவினர்.

இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: பெருகி வரும் காற்று மாசு, குறைவான மழை, நிலத்தடி நீர்மட்டம் சரிவு போன்வை, மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படுகிறது. பத்து ஆண்டிற்கு முன், காற்றை விலை கொடுத்து வாங்குவீர்கள் என, கூறியவர்களை பார்த்து நாம் ஏளனமாக சிரித்தோம். ஆனால், டெல்லி, மும்பை மற்றும் சென்னையில், தற்போது சுத்தமான காற்று விற்க கடை திறக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள், இனி நடக்காமல் இருக்க, நாம் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, மாணவர்களைக் கொண்டு, 10 ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X