சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலாளிகளை தாக்கிய 4 பேர் கும்பலுக்கு வலை

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஓசூர்: போச்சம்பள்ளி அடுத்த ராமாவரத்தை சேர்ந்தவர் சண்முகம், 28. போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 40. இருவரும், போச்சம்பள்ளி வசந்தபுரத்தில், புதிய நீதிமன்றம் கட்டுமான பணிக்கு இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்கள் பாதுகாக்கும் காவலாளி பணியில் இருந்தனர். கடந்த, 24 இரவு, போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 26 உட்பட நான்கு பேர்

ஓசூர்: போச்சம்பள்ளி அடுத்த ராமாவரத்தை சேர்ந்தவர் சண்முகம், 28. போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 40. இருவரும், போச்சம்பள்ளி வசந்தபுரத்தில், புதிய நீதிமன்றம் கட்டுமான பணிக்கு இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்கள் பாதுகாக்கும் காவலாளி பணியில் இருந்தனர். கடந்த, 24 இரவு, போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 26 உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல், இரும்பு கம்பிகளை திருட முயன்றனர். இதை சண்முகம், கோவிந்தசாமி தடுத்தனர். அப்போது, அவர்களை தாக்கி விட்டு, நான்கு பேரும் தப்பினர். காயமடைந்த இருவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சண்முகம் புகாரின்படி, போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X