திகார் சிறையில் 100 வது நாளாக சிதம்பரம்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (50)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.





ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆக.,21 ம் தேதியன்று இரவு, சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைவ ஏற்க சுப்ரீம் கோர்ட் அக்.,22 அன்று ஜாமின் வழங்கியது. ஆனால் சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன், இதே விவகாரத்தில் அக்.,16 அன்று அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கில், சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நவ.,27 வரை நீட்டிக்கப்பட்டது.





சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதே சமயம், ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி இதுவரை பலமுறை சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் சிதம்பரம், திகாரில் வசித்த நாட்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
29-நவ-201904:54:12 IST Report Abuse
Rajavel தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். சிதம்பரம் எனும் சூரியனை மேகங்கள் மறைக்கமுடியாது. கோமாளிகள் குற்றசாட்டு தவிடு பொடியாகும்
Rate this:
Share this comment
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-நவ-201904:46:32 IST Report Abuse
DARMHAR அப்புச்சி, அறம்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை இப்போதாவது நீர் உணர்ந்து அதர்ம வழியில் சேர்த்த சொத்துக்களை அரசுக்கே ஒப்படைத்து விட்டு செய்த குற்றத்தை நீதி மன்றத்தில் உண்மை மனதுடன் ஒப்புக்கொண்டு மன்றாடினால் தான் இந்திய மக்கள் உன்னை மன்னிப்பார்கள். ஒரு வேளை நீதி மன்றமும் உனக்கு கருணை காட்டி குறைந்த தண்டனை வழங்க வழியும் ஏற்படலாம். நான் பிடித்த முயலுக்கு இரண்டரை கால்கள் தான் என்ற கோட்பாட்டு அகந்தை நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் நீதி மன்றம் உமக்கு நான்கு வருடம் திஹார் வாச தண்டனை வழங்கினாலும் நாட்டு மக்கள் உம்மை மன்னிக்கவே மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201904:08:38 IST Report Abuse
J.V. Iyer கொண்டாட்டம் களை கட்டுகிறதா தமிழ்நாட்டில்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X