சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலை வழக்கு: இருவர் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Added : நவ 28, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சானமாவு அருகே கடந்த, 11ல், கார் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவத்தில், கார் டிரைவர் முரளி உடல் கருகி பலியானார். படுகாயம் அடைந்த ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்பாபுவின் மனைவி நீலிம்மா மருத்துவமனையில் இறந்தார். ஆனந்த் பாபுவின் அக்கா கணவரான தொழிலதிபர் ராமமூர்த்தி, தொழில் போட்டியால், மதுரை கூலிப்படை உதவியுடன், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த தொடர்பாக, ஏற்கனவே ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலம், மாஸ்தி போலீஸ் ஸ்டேஷனில், இருவரும், சேலம் ஜே.எம்.,2 நீதிமன்றத்தில் ஒருவரும் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய, மதுரை மேலபென்னகரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 29, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அம்பலவாணன், 24, ஆகிய இருவர், நேற்று முன்தினம் பெரியகுளம் மாதிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும், 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X