இந்த செய்தியை கேட்க
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‛தர்பார்' படத்தின் முதல் பாடலான ‛சும்மா கிழிகிழி' பாடல், ஐயப்ப சுவாமி பற்றிய பழைய பாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள், அனிருத்தை கிழிகிழி என கிழித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் 'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சும்மா கிழி' என்ற பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஒரு பக்கம் பாடல் ஆஹா.. ஓஹோ... என புகழப்படுகிறது. பாட்டின் முடிவில், ‛‛சும்மா கிழி கிழி அய்யோ... சூப்பர்...'' என ரஜினியே புளங்காகிதம் அடைகிறார். இன்னொருபுறம் பாடல், கிழி, கிழி என்று கிழித்து தொங்கவிடப்படுகிறது.
வெளியான உடனேயே இது 'காப்பி' பாடல் என சமூக வலைத்தளங்களில் கமென்டுகள் அதிகம் வர ஆரம்பித்தன. யு-டியூப்பிலும் பல வீடியோக்கள் இந்த காப்பி பற்றி வெளியாகின.

1990ல் தேவா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய 'தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது, மனசு தவிக்குது' என்ற பாடலைத்தான் அனிருத் காப்பியடித்து 'சும்மா கிழி' பாடலை உருவாக்கியிருக்கிறார் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
வேறு சிலரோ ஸ்ரீஹரி பாடிய 'கட்டோடு கட்டு முடி' என்ற ஐயப்பன் பாடலைத்தான் அப்படியே காப்பி அடித்திருக்கிறார் என கூறுகின்றனர்.
#ChummaKizhi Another Copy 😂😂😂
..
சும்மா கிழிச்சிட்டீங்க😀😀😂😂😂#Darbar #Bigil pic.twitter.com/cazSRdZJrE
— VIVIN RISH (@Vivin_Rish) November 28, 2019
Adappavikala :@ pic.twitter.com/6HuE864ao2
— Sonia Arunkumar (@rajakumaari) November 27, 2019
இந்த இரண்டு பாடல்களைக் கேட்டுப் பார்த்ததில் 'சும்மா கிழி' பாடலில் அவற்றின் சாயல் உள்ளது. மேலும், 'பேட்ட' படத்தின் 'மரணம் மாஸு மரணம்' பாடலும், 'வேதாளம்' படத்தின் 'வீர விநாயகா' பாடலும் இடையிடையே வந்து போகிறது என்றே பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
'தர்பார்' முதல் பாடல், தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி தடுமாற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE