பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உதயம்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Tirupattur, District, CM, EPS, Palanisamy, திருப்பத்தூர், மாவட்டம், உதயம், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (நவ.,28) தமிழகத்தின் 35 மற்றும் 36வது மாவட்டங்களாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயமானது. விழாவில் பழனிசாமி பேசியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 4 தாலுகாக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ராணிப்பேட்டை 4 தாலுக்கா, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுடன் இருக்கும். அரசின் சலுகைகள் எளிதாக கிடைக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது எனக் கூறுவது தவறு. இவ்வாறு பழனிசாமி பேசினார்.



வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வியாழனன்று தமிழகத்தின் தமிழகத்தின் 35 மற்றும் 36வது மாவட்டங்களாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயமானது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித்தேர்தலை மனதில் கொண்டு மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். ஆனால் உள்ளாட்சித்தேர்தலை க ருத்தில் கொண்டு மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை ஏற்கனவே உள்ளாட்சித்தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வரையறை செய்துள்ளது என்றார். தென் பென்னை பாலாறு இணைப்புதிட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அப்போது தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
28-நவ-201917:00:05 IST Report Abuse
TechT vellore to ranipet hardly 30km distance and different districts?? Arakkonam to raniper 55km, arakkonam to kachipuram 30 km in a different district??
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
28-நவ-201916:56:55 IST Report Abuse
TechT அரக்கோணம் ??
Rate this:
Share this comment
Cancel
28-நவ-201914:22:34 IST Report Abuse
kulandhai Kannan எடப்பாடி அரசு கிஞ்சித்தும் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், ஆம்பூர், வாணியம்பாடி தாலுக்காக்களை உள்ளடக்கி, திருப்பத்தூர் என்ற சிறிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் பயங்கரவாத மாவட்டமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய தலைவலியை இனிவரும் அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X