இந்த செய்தியை கேட்க
மதுரை: என் மீது வழக்கு போட்டால் கொலை செய்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடை ஏறினாலே பொய் கதைகளை கூறுவதும், யாரையாவது வம்புக்கு இழுப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். அவரின் பேச்சுக்கு கைத்தட்டும் தம்பிகளுக்கு அது பொய் எனவும் வீண் சவடால் எனவும் தெரிவதில்லை போலும். கைத்தட்டுக்கு மயங்கி பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் கூறி மாட்டிக்கொள்கிறார்.
அந்த வகையில் மதுரையில் நேற்று (நவ.,27) நடந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன். வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான்.

வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான். அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போகிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.
இவரின் தொடர் சர்ச்சை பேச்சு பழகிவிட்டாலும், இவரின் தம்பிகள் விழித்து கொள்ளும் வரையில் இதுபோன்ற திமிர் பேச்சுகளை சீமான் தொடர தான் செய்வார் போலும்.