பொது செய்தி

இந்தியா

அரசு அலுவலகங்களில் லஞ்சம் : 6வது இடத்தில் தமிழகம்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (66)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவது அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52 சதவீதமாக இருந்த லஞ்சத்தின் அளவு, நடப்பு ஆண்டில் 62 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.





அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு, மக்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக டிராஸ்பாரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்களின் அளித்த லஞ்சத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அரசு அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், பீகார்-2, உ.பி.,-3, தெலுங்கானா - 4, கர்நாடகா - 5, தமிழகம் - 6, ஜார்கண்ட் - 7, பஞ்சாப் - 8 ஆகிய இடங்களில் உள்ளன. இதே போன்று லஞ்சம் குறைவாக உள்ள மாநிலங்களில் டில்லி முதலிடத்திலும், அரியானா 2வது இடத்திலும், குஜராத் 3 வது இடத்திலும், மேற்குவங்கம் 4வது இடத்திலும், கேரளா 5வது இடத்திலும், கோவா 6வது இடத்திலும், ஒடிசா 7 வது இடத்திலும் உள்ளன.





சொத்து மற்றும் நில பட்டா மாற்றுவது தொடர்பான விவகாரங்களுக்காக அதிகம் லஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் 41 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது. லஞ்சம் அதிகம் பெறப்படும் துறைகளில் மாநகராட்சி 2வது இடத்தில் (19 %) உள்ளது. 3வது இடத்தில் காவல் துறை உள்ளது. இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 62 சதவீதம் பேரில் 35 சதவீதத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை லஞ்சம் அளித்தவர்கள். 27 சதவீதம் பேர் ஒருமுறை அல்லது 2 முறை லஞ்சம் கொடுத்தவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
28-நவ-201923:06:21 IST Report Abuse
Viswanathan இன்று கூட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் , மக்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று கேள்வி கேட்க வேண்டும் என ஆளும் கட்சி பிரமுகர் பேசி கொண்டிருந்தார் . எந்த ஒரு அரசு சார்ந்த வேலை முடியவும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி ஒரு இருபது தடவை பொது மக்களை அலைய விடும் போது , மக்கள் மாற்று வழிக்கு தள்ள படுகிறார்கள் . லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் , மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தால் , அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஓய்வு ஊதியத்தையும் , அல்லாத graduity கொடுக்காமல் அனுப்பி விட வேண்டும் . ஏனெனில் இவர் ஏற்கனவே லஞ்சமாக சம்பாதித்த பணமே அவருக்கு போனஸ், ஓய்வு ஊதிய தொகை . லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு இப்படி தண்டனை கொடுக்க பட்டால் , எவனும் லஞ்சம் வாங்க மாட்டான் . அனைவர்க்கும் இது தெரியும் . ஆனால் தமிழகத்தில் இது நடக்காது
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
28-நவ-201921:05:33 IST Report Abuse
Krishna Most Govt. Officials (incl. Judges) Don’t Care to Serve People Besides Grave Power Misuses & Corruption Despite VV Fat Pay Expenditures. Best Ways To Improve Services to Supreme People are (a) Abolish All Govt. Posts as they have become Anti-People (b) Double Employment for every Post But Only On Minm Wages (incl. Judges) For Reducing Wastage of Public Money, Increasing Work Efficiency & Services to People. (c) Reduce Pay of All Current Govt. Officials to 25% of Current Pay as they are Worthless Even that amount Remaining 25% Pay Based Only on Satisfactory Feedback Certificates Issued by General Public after their Services-Maxm Pay them Only 50% (d) Saved Huge Money be Used for Genuine-Normal Developments (not Freebies-Concessions) (e) Let People’s Reps SUSPEND Govt Officials on Mere Accusations by 01 or More Unbiased-Affected People (Heavens Wont be Lost If they are not in Service –let them Defend in Neutral Courts Even Arrest them If there are Prima Facie Evidence on Investigation) (f) Abolish Misusing Unionism- Let Affected Individuals Fight for their Genuine Rights by Personal Applications & Petitions. BUT WHO WILL DO THESE-Ruler Leaders-Peoples Rep Sheeps Want Govt. Officials For Misuse of Powers & Loot of Public Money-Assets. Senior Officers Don’t Do for Same Reasons, Brotherhood Bias & Unionism. Judges are Not Bothered to Serve Justice & People (Only Extremely Delayed,, Pro-Ruler Biased & Non-Quality Judgements). ONLY GOD OR EVERY YEAR ELECTIONS (NON-COSTLY) CAN SAVE THE COUNTRY.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
28-நவ-201920:35:26 IST Report Abuse
konanki 1967 ல் தமிழ் நாட்டை பீடித்த தீய சக்தியின் விளைவு இந்த "வளர்ச்சி". எப்படி பட்ட மனிதர் காமராஜர். அவரை தோற்கடித்ததின் விளைவு தான் இந்த தண்டனை தமிழ் நாட்டிற்கு
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201901:52:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆறாவது இடத்தில கூமுட்டை. மொத அஞ்சு இடத்துலே ஒங்க காவி ராஜ்ஜியம் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X