4 எம்எல்ஏ.,க்களை மீட்ட தேசியவாத காங்., பெண் நிர்வாகி

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்-காங்., கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது இறுதி செய்யப்பட்டு விட்டதால், கடந்த ஒரு மாதமாக நடந்த வந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முக்கிய காரணமாக கூறப்படுவது தேசியவாத காங்.,ன் மாணவர் அணி தலைவியான 28 வயதாகும் சோனியா தூஹன். இவர் தான் பா.ஜ., பிடியில் இருந்த 4 தேசியவாத காங்.,

இந்த செய்தியை கேட்க

மும்பை : மஹாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்-காங்., கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது இறுதி செய்யப்பட்டு விட்டதால், கடந்த ஒரு மாதமாக நடந்த வந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முக்கிய காரணமாக கூறப்படுவது தேசியவாத காங்.,ன் மாணவர் அணி தலைவியான 28 வயதாகும் சோனியா தூஹன். இவர் தான் பா.ஜ., பிடியில் இருந்த 4 தேசியவாத காங்., எம்எல்ஏ.,க்களை மீட்டு வந்து, அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட காரணமாக இருந்துள்ளார்.



latest tamil news




எம்எல்ஏ.,க்கள் மீட்கப்பட்டது எப்படி :


நவ.,23 அன்று அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற பிறகு, அவருடன் சென்ற 4 எம்எல்ஏ.,க்கள் மாயமாகினர். குருகிராம் ஓட்டலில் பா.ஜ.,வின் பிடியில் இருந்த தேசியவாத காங்., எம்எல்ஏ.,க்கள் 4 பேரை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பு தூஹனிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 எம்எல்ஏ.,க்களில் ஒருவர், கட்சி தலைவர் சரத் பவாருக்கு, தாங்கள் எங்கு இருக்கிறோம் என எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளித்துள்ளார். இந்த தகவலை வைத்து குருகிராம் ஓபராய் ஓட்டலில் இருப்பதை கண்டுபிடித்த தூஹன் குழுவினர், ஓட்டலுக்கு சென்றனர்.


latest tamil news



அங்கு 3 அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த தேசியவாத காங்., எம்எல்ஏ.,க்களுடன் 100 முதல் 150 பா.ஜ., உறுப்பினர்கள் இருப்பதை தெரிந்து கொண்டனர். நிலைமையை புரிந்து கொண்ட தேசியவாத காங்., கட்சியினர், அதே ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். தலா 100 பேர் வீதம் 2 குழுக்களாக பிரிந்து, பா.ஜ.,வினரின் நடவடிக்கையை கவனித்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு 2 நிமிட இடைவெளியில் ஒரு எம்எல்ஏ.,வை மீட்டுள்ளனர். பிறகு இரவு 10 மணியளவில் அடுத்த குழுவை சேர்ந்தவர்கள் மாறுவதற்கு இடையேயான உணவு இடைவெளியில் 3 எம்எல்ஏ.,க்களை மீ்ட்டுள்ளனர்.

அங்கிருந்து டில்லியில் உள்ள சரத் பவார் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட எம்எல்ஏ.,க்களுக்கு 2.40 மணிக்கு விமான டிக்கெட் புக் செய்யப்பட்டு, அதிகாலை 4.40 மணிக்கு மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, 5.10 மணிக்கு ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.


latest tamil news




யார் இந்த சோனியா தூஹன் :


அரியானாவின் ஹிசர் மாவட்டத்தை சேர்ந்த இவர் படித்துக் கொண்டிருந்த போதே அரசியல் இணைந்து, 21 வது வயதில் தேசியவாத காங்.,ல் இணைந்துள்ளார். குருஷேத்ரா பல்கலை.,யில் இளநிலை பட்டம் படித்த இவர், டில்லி பல்கலை.,யில் நடந்த 2 தேர்தல்களில் தேசியவாத காங்.,ன் மாணவர் அணியை வழிநடத்திவர். அந்த தேர்தல்களில் தேசியவாத காங்., பெற்ற வெற்றிகளை தொடர்ந்து தேசியவாத காங்., கட்சியின் மாணவர்கள் அணியின் தேசிய தலைவராக உயர்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-201920:24:50 IST Report Abuse
Sampath Kumar அய்யா நல்லவரே உனக்கு வாயில் நல்லதே வராது போல நாசமா போ
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201902:26:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாணக்கியன் ஒரு சின்ன பொண்ணு கிட்டே தோத்துட்டானா? படு கேவலமா இருக்கே.. ஐயோ பாவம்..
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
29-நவ-201920:05:05 IST Report Abuse
Nallavan Nallavanஇவளுக்கும் ஒரு ரேட்டு இருக்கும் ஆபீசர் ...... அதுக்கு உங்களமேறி ஆபீசரைத்தான் புடிக்கோணும் ........
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
29-நவ-201921:02:31 IST Report Abuse
Nallavan Nallavanஆபீசர் ....... சாணக்கியனோ, இந்தப்பொண்ணோ ரெண்டு பேருல ஒருத்தரு தோத்து இன்னொருத்தர் ஜெயிச்சாலும் நானோ, நீயோ உழைச்சுத்தான் சாப்புடணும் .......
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
28-நவ-201919:39:02 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இவர் தான் பா.ஜ., பிடியில் இருந்த 4 தேசியவாத காங்., எம்எல்ஏ.,க்களை மீட்டு வந்து, அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட காரணமாக இருந்துள்ளார். //// ஆட்சி அமைக்கிற ஒரே நோக்கத்தோட, துட்டு நெறையா செலவு பண்ண எந்தக் கட்சி தயாரா இருக்குதோ ...... அந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் .....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201901:58:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தேர்தல் பத்திரம் இருக்கே.. பத்தல்லயா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X