கால்நடை டாக்டர் எரித்து கொலை

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை டாக்டரை கொலை செய்து, உடலை எரித்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தெலுங்கானாவில் ரெங்காரெட்டி மாவட்டம், கொலுரு கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா(24). கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று(நவ.,27) காலை மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு தனது சகோதரியை தொடர்பு கொண்டு, தனது இரு சக்கர வாகனம்
கால்நடை டாக்டர், மர்மநபர்கள்,கொலை

ஐதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை டாக்டரை கொலை செய்து, உடலை எரித்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானாவில் ரெங்காரெட்டி மாவட்டம், கொலுரு கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா(24). கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று(நவ.,27) காலை மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு தனது சகோதரியை தொடர்பு கொண்டு, தனது இரு சக்கர வாகனம் பழுதடைந்து விட்டது. அங்கு இருக்க பயமாக உள்ளது. சிலர் தனக்கு உதவ முன்வந்துள்ளனர் எனக்கூறியுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தினர், அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும், பிரியங்கா வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஷாத்நகரில் உள்ள சதன்பளி பாலத்தில் பிரியங்கா, உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் வந்து அவரது உடலை அடையாளம் காட்டினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
01-டிச-201912:40:20 IST Report Abuse
Kumar periyaar பலாத்காரம் செய்தவர் ஒரு ஹிந்துவாக தான் இருப்பார்
Rate this:
Cancel
29-நவ-201915:06:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நேரத்தோடு கிளம்பி இருக்கவேண்டும் , குறுகிய தூரத்திற்கு தான் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும் , அதிக தூரம் என்றால் பொது போக்குவரத்து தான் சிறந்தது , இது ஆண்களுக்கும் ஏற்படலாம் , ஆண்களுக்கு வழிபறியோடு போகலாம் , அல்லது எதிர்த்து நின்றால் கொலையும் நடக்கும் , பெண்களுக்கு எல்லாமே இழப்பு தான்.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
29-நவ-201910:56:08 IST Report Abuse
R Ravikumar கற்பழிப்பு மற்றும் கொலை என்று தான் எண்ண தோன்றுகிறது . போக்ஸோ சட்டம் கடுமையானது என்றாலும் , தண்டனை நிறைவேற்ற ஏன் இவ்வளவு கால தாமதம் செய்கிறார்கள் ?? தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் . அதுவும் உடனே நிறைவேற்ற பட வேண்டும் . அது மிக முக்கியமானது ., அம்பேத்காரின் சட்ட சாசனம் மிக தவறு என்று தோன்றுகிறது . ஐரோப் பிரிட்டிஷ் கலாச்சார சட்டம் நம் நாட்டுக்கு சரி படாது . பாதிக்கப்பட்ட ஒருவன் தானே நீதி மன்றத்தில் தனது குறையை சொல்ல கூடாதா ? superme கோர்ட் ஏன் டெல்லி யில் மட்டும் இருக்க வேண்டும் ? . எனது உஊரில் நியாயம் கிடைக்காது அதற்கு நான் ஏன் டெல்லி செல்ல வேண்டும் ? பழைய கிராம பஞ்சாயத்து நடை முறையை இந்த நீதி துறை அமல் படுத்த வேண்டும் . அதாவது கோர்ட் எல்லா கிராமத்திலும் இருக்க வேண்டும் . ( வக்கீல் , retired டீச்சர் , சமூக ஆர்வலர் etc ) என ஒரு குழு எல்லா கிராமத்திற்கும் வேண்டும் . அதை இந்த அரசாங்கம் , மற்றும் நீதி துறை இணைந்து செயல் படுத்த வேண்டும் . நியாயம் கிடைக்கா நீதி அநியாயம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X